சாமி ஆடுவது போல் நடித்து மனைவியை தாக்கிய கணவர்.. அவ்வளவு பயமா?
நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன். (வயது 32). இவரது மனைவி பாண்டியம்மாள் (26). ஆனந்தன் தினமும் குடித்து விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததால் அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு கணவன்-மனைவி இருவரும் சென்றனர்.
அப்போது திடீரென ஆனந்தன் தனக்கு அருள் வந்தது போல சாமி ஆடினார். பின்னர் தனது மனைவியை கடுமையாக தாக்கினார். மேலும் அருகில் இருந்த கல்லால் அவரது தலையில் தாக்கி கீழே தள்ளினார். படுகாயமடைந்த அவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து விளாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த ஆனந்தனை கைது செய்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்