கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!
இன்று (02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில், யட்டிகல்பொத்த சந்தியிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும். இவ்விபத்தில், குருணாகலை நோக்கி வந்த லொறி ஒன்றும், இதன் எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த, தந்தை, தாய், மகன் (20), மகள் (08) ஆகிய நால்வரும் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்