Header Ads

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சாமி தரிசனம்..

இலங்கை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், இலங்கை வடக்கு மாகாண முதல்வருமான விக்னேஸ்வரன், தனது குடும்பத்தினருடன் நான்கு நாள் சுற்றுப்பயணமாக குற்றாலம் வருகை தந்தார். அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர் ஆனந்தன் மற்றும் ஸ்ரீநரசிம்ம கைங்கர்ய சபை நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்தார். இதன்பிறகு கீழப்பாவூர் சுரண்டை சாலையில் அமைந்துள்ள சாம்ராஜ் லெட்சுமி நரசிம்ம பீடத்திற்கு சென்று, அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

அவருடன் இலங்கை பாதுகாப்பு அலுவலர் அரிச்சந்திரகுமார், குற்றாலம் குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர் ஸ்ரீநிவாச வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண‌ முதல்வர் வருகையையொட்டி பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன்,ஜெய்சங்கர் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.