பொலிஸ்காரரின் மனைவியை மானபங்கம் செய்ய முயன்ற நபர்..
நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது32). தச்சு தொழிலாளி. இவரது அண்ணன் புதுவையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியை விமல் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து வந்தார். தொடக்கத்தில் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் என்று விமல் குறித்து அவர் கணவரிடம் புகார் தெரிவிக்கவில்லை.
நாளடைவில் விமல் எல்லை மீறவே இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ்காரர் அவரது தம்பியை கண்டித்தார். சில நாட்கள் மட்டுமே அமைதியாக இருந்து வந்த விமல் அதன்பிறகு மீண்டும் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று தனது அண்ணன் பணிக்கு சென்ற பின்னர் அண்ணியை விமல் மானபங்கம் செய்ய முயன்றார். இதனால் பொறுமை இழந்த போலீஸ்காரர் மனைவி இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விமலை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்