Header Ads

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 6 பொதுமக்கள் பலி..

ஆப்கானிஸ்தானின் மேற்கு கோர் மாகாணத்தில் நேற்று துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதி அங்கிருந்த கார் ஒன்றை சுட்டுத்தள்ளியுள்ளார். இதில், 6 பேர் பலியானதாகவும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாகாணத்தில் சிறுபாண்மையினராக உள்ள ஷியா பிரிவினரை குறிவைத்து தாலிபான் உள்ளிட்ட சில பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.