வெள்ளையாக மாற 5 வயது குழந்தையை கல்லால் தேய்த்த வளர்ப்புத் தாய்..
மத்தியப்பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலைச் சேர்ந்த சுதா திவாரி என்வர் நிஷாத்பூரா பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உத்தரக்காண்டிலிருந்து சிறுவன் ஒருவனை தத்தெடுத்துள்ளார். சிறுவன் கருப்பாக இருப்பாதாக சுதா திவாரி கவலையாக இருந்துள்ளார். இதையடுத்து ஒருவர் கூறிய ஆலோசனையின் அடிப்படையில் கருங்கல்லை கொண்டு உடம்பில் தேய்த்துள்ளார். இதனால் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து சுதாவின் உறவினர் சோபனா குழந்தைகள் மீட்பு குழுவினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனுக்கு எதிராக வளர்ப்புத்தாய் செய்த கொடுமைகள் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து சிறுவனை சுதா கொடுமை செய்துள்ளார். சுதாவை பலமுறை அக்கம்பக்கதினர் தடுத்தும் அவர் தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்துள்ளதாக சோபனா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்