Header Ads

40 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த குடும்பத்தை இணைத்த சமூக ஊடகங்கள்..

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கோம்ட்ராம் கம்பீர் என்பவர் 1978-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கே சென்றார் என்பது குறித்து தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். கம்பீரை தேடுவதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாததால் தேடும் பணியை கைவிட்டனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போட்டோகிராபர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில் கம்பீரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதனை கண்ட கம்பீரின் உறவினர் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் கம்பீரை கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தனர். அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரின் உதவியுடன் மும்பை போலீசை நாடினர்.

இதுகுறித்து தெரியவந்ததும் மும்பை போலீசார் கம்பீரை தேடும் பணியில் ஈடுபட்டு அவரை கண்டுபிடித்தனர். கம்பீர் 40 ஆண்டுகளுக்கு பின் சமூக ஊடகங்களின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்தார். கம்பீர் திருமணம் ஆன இரண்டு மாதங்களில் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.