ஓராண்டில் 1100 என்கவுண்டர் - 49 பேர் சுட்டுக்கொலை..
உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஓராண்டில் போலீசார் நடத்திய 1100 என்கவுண்டர்களில் 49 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி அவர் உத்தரபிரதேச முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
பதவிக்கு வந்ததும் அவர் போட்ட முதல் உத்தரவே, “சட்டம்-ஒழுங்கை பேண கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது தான். இதையடுத்து உத்தரபிர தேசத்தில் பிரபல ரவுடிகள் அனைவரும் வேட்டையாடப்பட்டனர்.
ரவுடிகளை ஒடுக்க தேவைக்கு ஏற்ப என்கவுண்டர் நடத்தலாம் என்று யோகி ஆதித்யநாத் போலீசாருக்கு அதிகாரம் வழங்கினார். அதை பயன்படுத்தி உத்தரபிரதேச போலீசார் அடிக்கடி என்கவுண்டர் நடத்தினார்கள்.
உத்தரபிரதேச போலீசாரின் இந்த என்கவுண்டர் அதிரடி வேட்டை தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. 2011-ம் ஆண்டு மார்ச் முதல் 2018-ம் ஆண்டு மார்ச் வரை ஓராண்டில் உத்தரபிரதேசத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடந்தன என்று ஆய்வு செய்யப்பட்டன.
அதில் 1100 தடவை போலீசார் என்கவுண்டர்கள் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகர் லக்னோ மாவட்டத்தில்தான் அதிக என்கவுண்டர்கள் நடந்துள்ளன. மீரட், ஷம்லி, முசாபர்நகர், பக்பத், சகரன் பூர், பலந்த்சாகர், காசியாபாத், நொய்டா மாவட்டங்களிலும் என்கவுண்டர்கள் மூலம் ரவுடிகள், சமூக விரோதிகள் வேட்டையாடப்பட்டனர்.
இந்த என்கவுண்டர்களில் 49 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 370 பேர் காயங்களுடன் தப்பினார்கள். போலீசாருடன் என்கவுண்டர்களில் ஈடுபட்டதாக 3,300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு உத்தரபிரதேசத்தில் அசம்கர் பகுதியில் பிரபல சமூக விரோதிகள் 5 பேர் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டது மிக முக்கியமான என்கவுண்டராக கருதப்படுகிறது. அந்த வேட்டையில் 5 போலீசாரும் பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரபிரதேசத்தில் நடந்த என்கவுண்டர்களுக்கு தேசிய மனித உரிமை கமிஷனும், மாநில மனித உரிமை கமிஷனும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 4 என்கவுண்டர்களை போலீசார் போலியாக நடத்தியதாக மாநில மனித உரிமை கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகளும் உத்தரபிரதேசத்தில் போலி என்கவுண்டர்கள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள், தலித்துகள் என்றும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்