Header Ads

பெண் நிருபரின் அழகை வர்ணித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்தார்..

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டிகாண முயன்றனர்.

அப்போது அவர் கேள்வி கேட்ட பெண் நிருபரை பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார்.

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பெண் நிருபரிடம் அழகை பற்றியே அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வருத்தம் தெரிவித்தார். “அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவே அவ்வாறு கூறினேன். இதற்காக அந்த பெண் நிருபரிடம் நான் போனில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். செய்தியாளர்கள் அனைவரையும் நான் சகோதர, சகோதரிகளாகவே பார்க்கிறேன்” என்றார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.