Header Ads

இந்தியாவின் ஜி.எஸ்.டி. தான் உலகிலேயே மிகச் சிக்கலான வரிமுறை - உலக வங்கி அறிக்கை..

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என 4 வகைகளில் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த முறையால் சில பொருட்களுக்கான வரி ஏற்கனவே இருந்ததை விட அதிகரித்தது. இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மக்கள் மத்தியிலும் விலை உயர்வு எதிர்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அமல்படுத்தப்பட்ட பின், 5%, 12%, 18%, 28% என 5 கட்டங்களாக ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இந்த விரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வர பல்வேறு பிரிவினரும் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி வரி அதிகம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.



’உலகளவில் 115 நாடுகளில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையானது நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தியாவின் ஜி.எஸ்.டி. கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக அடுக்குகளுடனும் இருப்பதால் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது’ என உலக வங்கி தெரிவித்துள்ளது.



அதேசமயம், ‘மிகச் சிக்கலான இந்த வரிமுறையை 0% வரிவிகிதம் ஓரளவுக்கு எளிமையாக்குவதாக சொல்லலாம். மேலும், 28% என்பது உலகளவில் இரண்டாவது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரம்பு. அதுமட்டுமின்றி 5%, 12%, 18% மற்றும் 28% என நான்குவிதமான அடுக்குகள் இருப்பது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான். இந்த வரிவிதிப்பு முறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் போது பல மாதங்களுக்கு நாட்டின் பொருளாதார செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்பட்டாலும், அதன்மூலம் நீண்டகாலத்திற்கு பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை’ எனவும் உலக வங்கி கூறியுள்ளது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.