Header Ads

இன்று உலக வனவிலங்குகள் தினம்- விலங்குகளை பாதுகாப்போம்..

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற 68வது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் அரிய வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தக சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதையடுத்து, மார்ச் 3-ம் தேதியை 'உலக வனவிலங்குகள்' தினமாக ஐ.நா அறிவித்தது. இந்த தினத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு வனவிலங்குகள் தினமானது பூனை இன வனவிலங்குகளை வேட்டையாடுவதிலிருந்து பாதுகாப்போம் என்ற கருவின் அடிப்படையில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கம், புலி, சிறுத்தை, ஜாகுவார், சீட்டா, பனி சிறுத்தை, பூமா போன்ற பூனை இனத்தைச் சேர்ந்த வனவிலங்குகள் தோல்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த ஆண்டு விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நாளை கொண்டாடும் விதமாக ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் சிற்பம் ஒன்றை செதுக்கியுள்ளார். வனவிலங்குகளை பாதுகாப்போம் என்ற வாசகத்துடன் அவர் செதுக்கிய சிற்பம் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.