பாதுகாப்பிற்காக பேஸ்புக்கில் அதிரடி மாற்றங்கள்!

பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டுள்ளன.
இந்த திருட்டில் 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' என்னும் தேர்தல் தகவல்கள் தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதை பேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன் இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் உபயோகிப்பாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் பேஸ்புக் தகவல்கள் மேலாண்மை எளிதாகும் அமைப்பு மெனு மறுவடிவமைப்பு செய்யப்படும் உபயோகிப்பாளர்கள் தங்கள் தகவல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிய பிரைவேசி ஷார்ட்கட்ஸ் மெனு ஒன்றை பேஸ்புக் அறிமுகம் செய்யும். இதைக்கொண்டு உபயோகிப்பாளர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தின் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள முடியும். அவர்களது தகவல்களை யார் யார் பார்க்கிறார்கள் செயல்களை யார் யார் காண்கிறார்கள் என்பதை கண்டு நிர்வகிக்க முடியும். அத்துடன் அவர்கள் பார்க்கிற விளம்பரங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்