Header Ads

சிரியாவுக்குள் புகுந்த ஈழத் தமிழ் புலி: அகதிகளை ஏற்றிக்கொண்டு தப்பி வந்த பைலட் இவர் தானாம்...



இந்த நாசமா போற பேஸ் புக்கால தமிழன் மானம் கப்பல் ஏறி வருது. கனடாவில் தரை இறங்கிய தமிழ் விமானி ஒருவர், கனடா பிளேனை எடுத்துச் சென்று சிரியாவில் 150 அகதிகளை ஏற்றி வந்தார் என்றும். மேலும் 13 பேரை அவர் ஏற்றியது அதிசயமான விடையம் என்றும் பேஸ் புக்கில் எழுதி உள்ளார்கள். அது என்னவென்றால் இருக்கும் பெற்றோல் கொஞ்சத்தை திறந்து விட்டு, அந்த நிறைக்கு அளவாக மேலதிகமாக 13 பேரை அவர் கனடாவுக்கு ஏற்றி வந்தாராம். ஏதோ பஸ்சில் ஆட்களை ஏற்றிய ரேஞ்சில் இந்த செய்தியை ஒருவர் எழுதி பேஸ் புக்கில் போட,

என்ன ஏது என்று கூட பாராமல், வீரத் தமிழன் வாழ்க , சூப்பர்டா மச்சி, தமிழண்டா , என்று எல்லாம் கூறி லைக் போடுகிறார்கள் பலர். இதில் எல்லாத்திற்கும் மேல்  இந்த செய்தியில் ஒரு வெடி வைத்துள்ளார் அதனை கேட்டால் அசந்து விடுவீர்கள். "ஏர் டைட்டன்" என்னும் விமானத்தை கனடா செய்ய உள்ளதாகவும் அதில் 25,000 பேர் செல்ல முடியும் என்று எழுதியுள்ளார்கள். அந்த விமானத்தை ஓட்ட , இந்த பைலட்டுக்கு கனடா பிரதமர் அனுமதி கொடுக்க உள்ளாராம் என்று எழுத , அதுக்கும் சூப்பர் டா மச்சி என்று லைக் போடுகிறார்கள் தமிழர்கள்..   இந்த படத்தில் உள்ள நபருக்கும் இந்தச் செய்திக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. ஏதோ இணையம் இவர் படத்தை தூக்கிப் போட்டுள்ளது அவ்வளவு தான். 

கனடா நாட்டின் ராணுவ விமானமே சென்று முதல் கட்டமாக 150 அகதிகளை அழைத்து வந்துள்ளது. அத்தோடு, மேலும் 25,000 அகதிகளை கனடாவுக்குள் எடுக்க அன் நாட்டு பிரதமர் ஒத்துக்கொண்டுள்ளார். இதுவே உண்மையான செய்தி. போலிச் செய்திகளை பரப்பி பிற சமூகத்தின் மத்தியில் எம்மை நாமே ஏன் தரம் தாழ்த்திக் கொள்ளவேண்டும் ? சற்றே யேசியுங்கள் மக்களே விழிப்போடு இருப்போம்...



No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.