வகுப்பறையில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த விகாஸ் குமார்(18) என்ற சிறுவன் பிடுபூர் பசார் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தான். விகாஸ் தனது தாத்தாவின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளான்.
இந்நிலையில், விகாஸ் குமார் பள்ளி வகுப்பறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை கண்ட மாணவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
மாணவனின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த முடிவு பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்