சற்று முன் ரஷ்யா பதிலடி: ரஷ்யாவில் உள்ள பிரித்தானிய தூதுவர்களை வெளியேற்றுவோம் என அறிவிப்பு
மொஸ்கோவில் உள்ள பிரித்தானிய தூதுவர்களை தாம் வெளியேற்ற உள்ளதாக சற்று முன் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த அறிவித்தல் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை மேலும் வலுவடையச் செய்துள்ளது. ரஷ்ய உளவாளியான ஸ்கிரிப்பாலை பிரித்தானியா தஞ்சம் கொடுத்து பாதுகாத்து வந்தவேளை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை கொலை செய்ய நச்சு வாயு பிரயோகிக்கப்பட்டது. இதனை கடுமையான எதிர்த்துள்ள பிரித்தானியா 23 ரஷ்ய அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா தற்போது பிரித்தானிய அதிகாரிகள் சிலரை நாடு கடத்தவுள்ளது. இன் நிலையில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லண்டன் வர இருந்தார். ஆனால் அவரை வரவேண்டாம் என்றும். தற்போது நிலமை சரியில்லை என்றும் கூறி, நிராகரிப்பு கடிதம் ஒன்றை 10 டவுனிங் வீதி அதிகாரிகள் அனுபியுள்ளார்கள்.
இதனால் ரஷ்யா மேலும் ஆத்திரமடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க, நேற்று நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் , ரஷ்யாவுடனான அனைத்து உயர் மட்ட தொடர்புகளையும் பிரதமர் தெரேசா மே துண்டிக்க வேண்டும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள். இதனை அவர் ஏற்றுக்கொண்டதாக இன்று அறிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்