Header Ads

அமெரிக்காவில் போலி மருந்து விற்ற இந்தியருக்கு 33 மாதங்கள் சிறை..

இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ் பச்சிராம் அகீலா என்பவர் போலி மருந்துகளை அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் விற்றுள்ளார். அவர் மருந்துகளை இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்துள்ளார். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கடத்தல்,பணமோசடி, ஏமாற்றுதல் போன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ரமேஷ் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ரமேஷ் மும்பையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆன்லைன் மூலம் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.