வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்கள்..!
பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நவமணிகண்டன். தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர்.
இதுபற்றிய புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் எம்.பி.ஏ. பட்டதாரியான ராஜசேகர், தட்சிணாமூர்த்தி, சட்டப் படிப்பு மாணவரான வேலப் பராஜா, என்ஜினியரிங் மாணவரான மணிகண்ட பூபதி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் ரூ.2 லட்சம் பணம், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல அண்ணா நகரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் பணம், 9 லேப் டாப், ஐபேட் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த ராஜா, மகேஸ்வரன், யாதவன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் ஜெயராமன் மேற்பார்வையில் துப்பு துலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்