ஹோலி பெயரில் கல்லூரி மாணவிகளின் மேல் விந்து (செமன்) நிரப்பிய பலூன்களை வீசிய இளைஞகள்.
ஹோலி பண்டிகையானது வட மாநிலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் வண்ண வண்ண பொடிகளை தூவியும், சாயக் கலவைகளை ஊற்றியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் ஹோலியை வரவேற்கத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் சில வக்கிரபுத்திக்காரர்கள் கல்லூரி மாணவிகள் மீது விந்து (செமன்) நிரப்பிய பலூன்களை வீசி ஹோலி கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி மாணவிகள் மீது சிலர் திரவம் நிரப்பப்பட்ட பலூன்களை வீசியுள்ளனர். முதலில் இதை அந்த மாணவிகள் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். ஆனால், உன்னிப்பாக கவனித்ததில் பலூனில் இருந்த திரவம் தண்ணீர் அல்ல, செமன் என்பதை அறிந்த மாணவிகள் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் கல்லூரியை சுற்றி போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர். மீண்டும் ஏதாவது அத்துமீறல் நடந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி போலீஸ் அதிகாரிகள் தங்களின் மொபைல் எண்களை கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி உள்ளனர்.
ஹோலி பெயரில் மாணவிகளை அவமதித்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் டெல்லி தலைமை போலீஸ் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற வாசகங்கள் நிறைந்த பலகைகளை வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து விசாரணை செய்ய தேசிய பெண்கள் வாரியம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரேகா தெரிவித்தார். மேலும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்