Header Ads

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 5 பேர் பலி.

அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த புயல் காரணமாக 5 பேர் பலியாகியுள்ளனர். மணிக்கு 129 கி.மீ வேகத்தில் வீசிய இந்த புயலினால் போஷ்டான் நகரெங்கும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. மேலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டதுடன், விமானங்கள் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புயலின் தாக்கத்தினால் கிழக்கு கடற்கரை பகுதியின் விர்ஜினியா முதல் மைனே வரையுள்ள 1.7 மில்லியனுக்கும் அதிகமாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் மணிக்கு 96 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதனால் அங்குள்ள அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. போஷ்டான் பகுதியில் தாக்கிய இந்த புயலினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.