216 கிலோ கஞ்சா கடத்திய 4 பேருக்கு நேர்ந்த கெதி..!
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு வேனில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த நான்கு பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாண்டீஷ்வரன், சதீஷ்குமார் மற்றும் முதலம்பாறையை சேர்ந்த தர்மர், இருளாண்டி என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 108 பாக்கெட்களில் கடத்தப்பட்ட 216 கிலோ கஞ்சா பொட்டலங்களும், கஞ்சா கடத்த பயன்படுத்திய வேன் மற்றும் ஒன்றரை லட்ச ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்