Header Ads

கண்புரை அறுவை சிகிச்சை செய்த பின்னர் ஒற்றைக்கண் பார்வையிழந்த 11 பேர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தாகன், தர்க் மற்றும் பலோத் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த 96 பேருக்கு கிறிஸ்தவ மிஷனெரி மருத்துவமனை ஒன்றில் கடந்த மாதம் 22, 23 தேதிகளில் கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை ஏற்பட்டவர்களில் 32 பேர் கண்ணில் வலி இருப்பதாக சில நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனையை அணுகியுள்ளனர். இதனை அடுத்து, அவர்களை சோதனை செய்ததில் 11 பேருக்கு அறுவை சிகிச்சை செய்த கண்ணில் பார்க்கும் திறனை இழந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பார்வையிழந்த 11 பேரும் ராய்ப்பூர் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.