Header Ads

பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு..

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் நோக்கி பேருந்து ஒன்று இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை 77-ல் சென்றபோது சீதாமர்ஹி மாவட்டத்தின் பனஸ்பதி கிராமம் அருகே வந்தபோது பேருந்து நிலைதடுமாறியது.

இதில் அந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் என 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
   
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கீழே விழுந்து நொறுங்கிய பேருந்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.