சக வீரரின் மகளிடம் சில்மிஷம்: ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை.
சென்னை கோட்டை அருகே உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தவர் பிரதாப்குமார் நாயக் (வயது 30). இவர் அங்குள்ள ராணுவ குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு இவரது குடியிருப்புக்கு அருகே வசித்து வந்த மற்றொரு ராணுவ வீரரின் மனைவி, பிரதாப்குமார் நாயக் மனைவியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது 4-ம் வகுப்பு படித்து வந்த தனது மகளை, பிரதாப்குமார் நாயக்கிடம் விட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் பிரதாப்குமார் நாயக், அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்ட பிரதாப்குமார் நாயக்கிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்