மாரடைப்பும் இல்லை ஒன்றும் இல்லை- தண்னீரில் விழுந்து மூழ்கியே இறந்தார் ஸ்ரீதேவி- பொலிஸ் ரிப்போட்
நடிகை ஸ்ரீதேவை மாரடைப்பால் காலமானார் என்று அவரது கணவரின் தம்பி, மற்றும் கணவர் கூறியதில் உண்மை இல்லை என்று டுபாய் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அது போக ஸ்ரீதேவியின் உடலை உடனடியாக தருமாறும். பிரதப் பரிசோதனை வேண்டாம் எனவும் கணவர் விடுத்த கோரிக்கையை டுபாய் நாட்டு பொலிசார் மறுத்துவிட்டார்கள். சட்ட ரீதியாக என்ன செய்யவேண்டுமோ, அதனை செய்த பின்னரே உடலை தருவோம் என்று கூறிவிட்டார்கள். இதனால் நேற்று இந்தியா செல்லவேண்டிய உடல், இன்றுவரை டுபாய் மருத்துவ மனையில் உள்ளது.
பிரேதப் பரிசோதனை நிகழ்த்திய மருத்துவர் சாமி என்பவர் சான்றிதழ் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நடிகை ஸ்ரீதேவை குழியல் அறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து, மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. அதுபோக அங்கே பணியில் இருந்த மற்றும் சம்பவத்தை நெரில் பார்த்த அனைவரையும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்