துபாய் பல்கலைக்கழகத்தில், இந்திய மாணவர் எடுத்த விபரீத முடிவு..
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை தலைமையிடமாக கொண்ட முர்டோச் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன.
இந்நிலையில், துபாயில் உள்ள முர்டோச் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க மாணவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக கடந்த புதன்கிழமை காலை சுமார் 10 மணியளவில் அவசர உதவி மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் வந்தது. விரைந்துவந்த மீட்புக்குழுவினர் அந்த மாணவரின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியாவை சேர்ந்த அந்த மாணவரின் பெயர் விபரம் ஏதும் வெளியிடப்படாத நிலையில், கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக தனது தந்தையுடன் அந்த மாணவர் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.
கழிப்பறைக்கு செல்வதாக தந்தையிடம் கூறிச்சென்ற அவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடர்பாக துபாய் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்