ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் எவ்வளவு தெரியுமா.?
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 25-ந் தேதி நிலவரப்படி, ஜனவரி மாத வசூல், ரூ.86 ஆயிரத்து 318 கோடியாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 57 லட்சத்து 78 ஆயிரம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்குகளை தாக்கல் செய்வதற்கு ஜனவரி 18 கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் சுமார் 9 லட்சத்து 25 ஆயிரம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் ரூ.421.35 கோடி ஜி.எஸ்.டி.யாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வசூல், ஜூலை மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் மாதம் ரூ.80,808 கோடியாகவும், டிசம்பர் மாதம் ரூ.86,703 கோடியாகவும் இருந்தது.
ஜனவரி மாதத்திற்கான ஜி.எஸ்.டி. கணக்குகளை தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 20-ம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்த நிலையில், இந்த மாதம் மீண்டும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்