Header Ads

ஆம்புலன்சில், குழந்தை பெற்ற பெண்..

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி மோகன பிரியா (வயது 21). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மோகனபிரியா 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நேற்று இரவு 9.30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருடைய பெற்றோர் அருகில் உள்ள 15 வேலம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.  அங்கு பிரசவம் பார்ப்பதற்கு உரிய வசதி இல்லாததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் 15.வேலம்பளையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். 108 ஆம்புலன்சை கருப்பையா என்பவர் ஓட்டினார். இந்த நிலையில் குமார் நகர் அருகே வந்த போது மோகனபிரியாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் கருப்பையா ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினார்.

பின்னர் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் பாண்டியம்மாள், மோகனபிரியாவுக்கு பிரசவம் பார்த்தார். இரவு 10 மணி அளவில் மோகனபிரியாவுக்கு ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது.

அதன் பின்னர் கருப்பையா ஆம்புலன்சை வேகமாக ஓட்டி வந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தார். அங்கு தாய், சேய் இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.