சொந்த மகனை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு அடித்த கொடூர தந்தைக்கு நேர்ந்த கெதி..
ராஜஸ்தான் மாநிலத்தில் சொந்த மகனை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு அடித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமாத்தைச் சேர்ந்த ஜெயின் சிங்கிற்கு ஐந்து வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இரு குழந்தைகளையும் ஜெயின் சிங் அடிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் தனது மகனை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளார். சிறுமியை கொடூரமாக தாக்கினார். இரு குழந்தைகளும் கதறி அழுகின்றனர். இதனை ஜெயின் சிங்கின் சகோதரர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் ஜெயின் சிங் மற்றும் அவரது சகோதரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து நடத்திய விசாரணையில் குழந்தைகள் மண்ணில் விளையாடி ஆடை முழுவதும் அசுத்தம் ஆக்கியதால் அடித்ததாக ஜெயின் சிங் கூறினார். இந்த கொடூர சம்பவத்தை குழந்தையின் தாய் உட்பட அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஜெயின் மீதுள்ள அச்சத்தால் யாரும் அவரை தடுத்து நிறுத்தவில்லை.
ஜெயின் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறு குழந்தைகளை இரக்கமின்றி அடித்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்