Header Ads

வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா..?

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்கு அடுத்து பலரும் ரசித்த நபர் என்றால் வடிவேலு, காமெடியில் வைகை புயலாக இருந்து வருகிறார்.

இவருடைய ஒவ்வொரு காமெடி ரியாக்சன் தான் இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிக பெரிய பலமாக இருந்து வருகிறது, இவரது நடிப்பில் வெளியாகி இருந்த 23-ம் புலிகேசி படத்தை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளதாக தகவல்களும் அறிவிப்புகளும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாது என வடிவேலு விலகி கொண்டதால் அவர் மீது படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சங்கதில் புகார் அளித்துள்ளாராம்.

இதனால் நடிகர் சங்கம் வடிவேலுவிடம் படத்தை நடித்து கொடுங்கள், அல்லது தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஏற்று கொள்ளுங்கள் என கூறி வருகிறார்களாம். இது வடிவேலுவுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.