Header Ads

ஜப்பானில், முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி..

வடக்கு ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் சப்போரோ என்ற பகுதியில் உள்ளூர் அமைப்பு முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறது.  3 அடுக்குகள் கொண்ட மாடியில் நிதி நெருக்கடியில் இருக்கும் முதியோர்கள் குறைந்த வாடகையில் தங்கி உள்ளனர்.  அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான பணியையும் இந்த அமைப்பு செய்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இதில் 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 11 பேர் சிக்கி பலியாகினர்.  மற்ற 5 பேர் சிறிய காயங்களுடன் தப்பினர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் பலியானவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  பனிபடர்ந்த சூழ்நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  சம்பவம் நடந்தபொழுது ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.