ஊருக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு..
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அங்குள்ள முதலைப்பண்ணையில் 90-க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமராவதி அணையில் இருந்து நள்ளிரவு வெளியேறிய முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரவு முழுவதும் தேடினர். ஆனால் முதலை பிடிபடவில்லை.
அதிகாலை நேரத்தில் முதலை மார்க்கெட் பகுதியில் இருந்தது. இதுகுறித்து மீண்டும் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அமராவதி வனச்சரகர் முருகேசன் தலைமையில் அங்கு வந்த வன அலுவலர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் முதலையை பிடித்தனர். பிடிபட்ட முதலையை அமராவதி நகரில் உள்ள முதலைப்பண்ணையில் பத்திரமாக விட்டனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, அமராவதி அணையில் இருந்து செல்லும் கிளை வாய்க்கால் ஒன்றில் இருந்து இந்த முதலை ஊருக்குள் புகுந்துள்ளது. 13 அடி நீளமும், 35 வயது மதிக்கத்தக்கதுமான அந்த முதலையின் எடை 217 கிலோ இருந்தது என்று கூறுனர்.
முதலை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்