வாட்ஸ்-அப்பால், பலியான குடும்பப் பெண்..
கொல்கத்தாவில் உள்ள சேத்லா பகுதியை சேர்ந்தவர் சுராஜித்பால். இவரது மனைவி தும்பா பால் (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார்.
தும்பாபால் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்து வந்தார். எந்த நேரமும் செல்போனில் வாட்ஸ்-அப், பேஸ்புக் என யாருடனாவது தொடர்பில் இருந்து கொண்டிருந்தார்.
இதை பலமுறை சுராஜித்பால் கண்டித்தார். ஆனாலும், தும்பாபாலால் அதை கைவிட முடியவில்லை. சம்பவத்தன்று வீட்டில் சமைக்காமல் வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த சுராஜித்பாலுக்கு கோபம் அதிகரித்தது. அவர் தும்பாபாலை எச்சரித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுராஜித்பால் தலையிலும், உடலிலும் பல இடங்களில் குத்தினார். ஆனாலும் தும்பாபால் உயிர் போகவில்லை. இதனால் துணியை எடுத்து வந்து கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் சுராஜித்பால் தற்கொலை செய்வதற்காக தன் கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டார். ரத்தம் வெளியேறினாலும் அவருக்கு எதுவும் ஆகவில்லை. எனவே கையில் பேண்டேஜ் மூலம் கட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். கல்லூரிக்கு சென்றிருந்த மகன் வீடு திரும்பியபோது தாயார் இறந்து கிடந்ததை பார்த்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜித்பாலை கைது செய்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்