Header Ads

முடி கொட்டியதால், தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை..

மதுரையைச் சேர்ந்த மிதுன் என்ற வாலிபர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 27 வயதான இவருக்கு அவரது தாயார் பெண் பார்த்து வந்துள்ளார். மிதினுக்கு வெகு நாட்களாக முடி கொட்டும் பிரச்சனை இருந்துள்ளது. அவர் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலுடன் காணப்பட்டார். இதனால் விடுமுறை எடுத்து கொண்டு மதுரைக்கு வந்து விட்டார். மிதுனின் கவலையை புரிந்து கொண்ட அவரது தாயார் வசந்தி ஆறுதல் கூறினார்.

ஆனால் மிதுன் குணமடையவில்லை. நேற்று வசந்தி கோவிலுக்கு சென்ற நேரம் பார்த்து மிதுன் தனது வீட்டில் தூக்கிட்டி தற்கொலை செய்து கொண்டார். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த வசந்தி அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மிதுனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முடி கொட்டிய சிறிய பிரச்சனைக்காக ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.