குடிபோதையில், ஓடையில் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி..
கிருமாம்பாக்கம் அருகே குடிபோதையில் ஓடையில் தவறி விழுந்த தனியார் ஊழியர் பலியானார்.
கிருமாம்பாக்கத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். (வயது 43). இவர் அங்குள்ள தனியார் சோப்பு கம்பெனியில் ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்தார்.
இவர் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட சென்றார். ஆனால், நேற்று முன்தினம் காலை வரை அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அங்குள்ள சாராயக்கடை அருகே ஓடையில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு படுத்து தூங்கிய போது ஓடையில் தவறி விழுந்து பாஸ்கர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடையில் தவறி விழுந்து பலியான பாஸ்கருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்