Header Ads

புத்தாண்டு தினத்தில் கோயிலுக்குச் சென்ற, ஐவருக்கு நேர்ந்த துயரம்..

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், சவுடனாகுப்பே கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக கோரவனஹள்ளி லட்சுமி ஆலயத்தை நோக்கி இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர்.

குனிகல் தாலுகா, கவிமத் பகுதி வழியாக வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென்று ஓடிய குழந்தை மீது மோதாமல் இருப்பதற்காக காரை டிரைவர் இடதுபக்கமாக திருப்பினார்.

கண் இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமாக நின்றிருந்த ‘கேன்ட்டர்’ லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிட்டோஜி ராவ்(60), உஷா பாய்(38), புவனா(16), கீர்த்தனா(6), ஹிட்டேஷ்(4) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.