Header Ads

ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம்,, திருமண விழாவில் பலியான மணமகன்.. நடந்தது இதுதான்..

அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள குல்ஹா நகரை சேர்ந்தவர் விக்ரம். வெளிநாடு வாழ் இந்தியரான இவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் திருமண விருந்து நிகழ்ச்சி அரியானா மாநிலம் குல்ஹா நகரில் நடந்தது. அப்போது மணமகனை சுற்றி வந்து உறவினர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு நடன சுற்று முடியும் போதும் மணமகனின் உறவினர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். ஒரு முறை வானத்தை நோக்கி சுட்டபோது திடீரென்று ஒருவர் அவர் மீது மோதினார். இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு குறி தவறி மணமகன் மீது பாய்ந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.