மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு, இந்துக்கோயிலுக்கு மாலை அணிந்து புனித யாத்திரை செல்லும் கிறிஸ்தவர்.
இந்துக்கள் வேளாங்கண்ணி, நாகூர் புனித ஸ்தலங்களுக்கு செல்வது போல் சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாலை அணிந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவர் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் மாலை அணிந்து சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகிறார். இது பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த புனல் வாசலை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 65) கிறிஸ்தவர். இவர் கடந்த 1980-ம் ஆண்டு முதல் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு குருசாமியாக திகழ்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது கூறியதாவது:-
கடந்த 1977-ம் ஆண்டு எனது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பல மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. அப்போது ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் எனது நண்பர்களான உப்பு விடுதி செல்வராசு, திருச்சிற்றம்பலம் டாக்டர் தனபால் அறிவுரையை ஏற்று சபரிமலை ஐயப்பன் கோவில் வருவதாக வேண்டி கொண்டேன். இதன் பின் உடல் நலம் பெற்றதால் ஐயப்பன் மீது மிகுந்த பக்தி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து 1980-ம் ஆண்டு முதல் கடந்த 36 ஆண்டுகளாக சபரிமலை சென்று தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறேன். இந்த ஆண்டு 37-வது ஆண்டாக சபரிமலை செல்கிறேன். மதங்கள் வேறாக இருந்தாலும் கடவுள் பேதம் பார்ப்பதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். ஐயப்பனை எனது தெய்வமாக ஏற்றுக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்