48 மணிநேர சிறைவாசத்திற்காக, மலேசியாவில் இருந்து இந்தியா வந்த நண்பர்கள்..
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்காரெட்டி மாவட்டதில் சுமார் 220 ஆண்டுகால பழைமையான சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைக்கு மாற்றாக இங்குள்ள கண்டி கிராமத்தில் புதிய சிறை கட்டப்பட்டு கைதிகள் அங்கு மாற்றப்பட்டனர். நிஜாம் காலத்தில் கட்டப்பட்ட பழைய சிறைச்சாலை சிறை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை சிறைக்கு சென்று அறியாதவர்கள் அந்த அனுபவத்தை பெற விரும்பினால் 500 ரூபாய் கட்டணமாக செலுத்திவிட்டு இந்த சிறை அருங்காட்சியகத்தில் 24 மணி நேரத்துக்கு சிறை கைதியாக இங்கு தங்கி செல்லலாம் என கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அதன்பிறகு இதுவரை 47 பேர் இந்த சிறையில் தங்கி சென்றுள்ளனர்.
இந்த தகவலை இணையதளத்தின் மூலம் அறிந்துகொண்ட மலேசியா நாட்டை சேர்ந்த இரு நண்பர்கள் அந்த அனுபவத்தை பெறுவதற்காக அங்கிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களில் ஒருவரான ந்க் இன் வோ என்பவர் மலேசியாவில் பல் டாக்டராக இருக்கிறார். மற்றொருவரான ஓங் போன் டேக் என்பவர் கோலாலம்பூர் நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவர்கள் இருவரும் சங்காரெட்டி சிறை அருங்காட்சியக சூப்பிரண்ட் சந்தோஷ் ராய் என்பவரை சந்தித்து இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருக்க விருப்பம் தெரிவித்தனர். அதற்குரிய அலுவல்சார்ந்த நடைமுறைகள் நிறைவேறிய பின்னர் நேற்று காலை சுமார் 9.30 மனியளவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவருக்கும் கைதிகளுக்கான சீருடை, போர்வை, தட்டு, டம்ளர்கள் வழங்கப்பட்டது. (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆவார்கள்.
இதுவரை 47 பேர் பணம் செலுத்தி சிறையில் இருந்துவிட்டு சென்றாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இந்த அனுபவத்துக்காக இங்கு வந்துள்ளது இதுவே முதல்முறை என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்