சீனாவில் உறைந்து போன கடல் தீவில், 3,000 மக்கள் தவிப்பு..
சீனாவை கடும்பனிக்காலம் வாட்டி வதைக்கிறது. இதனால் அங்குள்ள ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முற்றிலுமாக உறைந்து பனிகட்டியாக மாறி உள்ளது. சிங்செங்க் மாகாணத்தின் அருகேயுள்ள, லியாவோடாங் வளைகுடா பகுதியில், கிட்டத்தட்ட 130 கி.மீட்டர் சுற்றளவுக்கு கடல் பகுதி பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜியுஹூவா தீவில் வசிக்கும் 3,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு அடி உயரத்திற்கு கடல் நீர் உறைந்துள்ளதால், கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும், சிறிய ரக கப்பல்களும் உறைபனியில் சிக்கியுள்ளதால் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 22 ஆம் தேதியில் இருந்தே ஜியுஹூவா தீவுக்கான போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பித்துள்ளது. ஆனால் தீவு மக்கள் போதுமான அளவுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உறைந்துள்ள கடலானது மார்ச் மாத இறுதியில் உருகும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்