104 வயது மூதாட்டிக்கு, இடுப்பு எலும்பு அறுவைசிகிச்சை.. டாக்டர்கள் சாதனை..
தானேவை முல்லுண்டு பகுதியை சேர்ந்த 104 வயதான மூதாட்டி கங்கா லால்ஜி காலா. இவர் சம்பவதன்று தன் படுக்கையில் தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்து வலியால் துடித்த அவரை குடும்பத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு நடத்திய சோதனையில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது தெரியவந்தது. அந்த மூதாட்டியின் வயதிற்கு இடுப்பு எலும்பு முறிவு அறுவைசிகிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது என்றாலும், நோயாளியின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆபத்தான அறுவைசிகிச்சை மூலம் எலும்புகளை வெற்றிகரமாக இணைக்கப்பட்டன.
இதுகுறித்து அறுவைசிகிச்சை டாக்டர்கள் கூறுகையில், ‘ நாங்கள் குழப்பமான மனநிலையிலேயே இந்த அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொண்டோம். ஆனால் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது ’ என்றார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்