லண்டனில் அம்மா என்னிடம் காசு இல்லை என்று அழுத மாணவி: ஆனால் 100 பவுண்டுகள் கடதாசியில் இருந்த மர்மம்
லண்டனில் இருந்து லீட்ஸ் நோக்கி பயணித்த மாணவி ஒருவர், தனது அம்மாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. என்னால் படிப்பை தொடர முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு பணக் கஷ்டம் உள்ளது என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார். மறு முனையில் இருந்து பேசிய அம்மா, நான் 35 பவுண்டுகளை உன் வங்கிக் கணக்கில் போட்டு இருக்கிறேன் என்று கூறினார். ஆனால், எனது வங்கி ஏற்கனவே கடனில் இருந்ததால், அந்த காசும் கிடைக்கவில்லை என்று மகள் கூறி கண்ணிர் விட்டார்.
பின்னர் அவர் அப்படியே தூங்கிவிட்டார். அவர் சேரவேண்டிய ரயில் நிலையம் வந்தவேளை அவர் எழுந்தவேளை. தனது மடியில் ஏதோ ஒரு பேப்பர் மடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதனை எடுத்துப் பார்த்தார். அதில் 100 பவுண்டுகள் இருந்ததோடு. உன் படிப்பு செலவுக்கு என்னால் முடிந்த உதவி என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. குறித்த பெண் அம்மாவிடம் பேசியது அனைத்தையும் , ஒருவர் கவனித்துக்கொண்டு இருந்துள்ளார். அவரே இப்பணத்தை அங்கே விட்டுச் சென்றுள்ளார்.
யார் இவர் என்று தெரியவில்லை. ஆனால் கோடி நன்றிகள் என்று அப்பெண் ஊடகம் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார். இப்படியும் சில மனிதர்கள் இன்னும் உலகில் வாழ்கிறார்கள். இதனால் தான் பூமி இன்றுவரை உயிர்துடிப்போடு இருக்கிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்