அமெரிக்காவில் வீதியில் கவிழ்ந்த ரயில்: பலர் பலி, பலர் காயம்...
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் ரயில் பெட்டிகள் வீதியில் கவிழ்ந்ததால் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைக்கு மேலாக பயணித்த ரயில் தடம் புரண்டதால், ரயில் பாதைக்கு கீழ் இருந்த ஐ-5 தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்தன.
குறைந்தது 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. இதில் ஒன்று தலைகீழாக நெடுஞ்சாலையில் விழுந்துள்ளது.
இதனால் நெடுஞ்சாலையில் பயணித்த பல வாகனங்கள் சிக்கியுள்ளன.
ரயிலில் பயணிதவர்கள் பலர் இறந்துள்ளனர்.
தீயணைப்பு துறையினர் ரயிலில் சிக்கியிருந்த மக்களை மீட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சுமார் 78 பயணிகளும், ஐந்து பணியாளர்களும் ரயிலில் பயணித்ததாக தெரிகிறது.
விபத்து ஏற்படுவதற்கு முன்பு ரயில் மணிக்கு 130 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு..
அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலத்திலிருந்து பயணிகள் ரயில் தடம் புரண்டு விழுந்ததால், அந்தப் பாலத்தின் கீழாக பயணித்த வாகனங்கள் மீது ரயில் பெட்டிகள் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளன.
இதன்போது, இரு லொறிகள் உட்பட ஏழு வாகனங்கள் சிக்கியுள்ளன.
குறித்த வழிதடத்தில் செல்லும் அம்ட்ராக் ரயிலின் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சியேட்டலில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு புறப்பட்ட விபத்துக்குள்ளான ரயில் 501 போர்ட்லேண்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
இந்த விபத்து டக்கோமாவின் தெற்கு பகுதியில் உள்ள வழிததடத்தில் ஏற்பட்டது. இந்த வழித்தடமானது முன்பு சரக்கு ரயில்கள் செல்ல மட்டும் உபயோகிக்கப்பட்டதாகும் .
குறித்த பயணிகள் ரயிலில் 77 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ள டுவிட்டரில்,
"இந்த விபத்தானது தனது உட்கட்டமைப்பு திட்டம் ஏன் முக்கியாமான ஒன்று என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் வீதிகள், பாலங்கள் மற்றும் ரயில்வே ஆகியவை மோசமாக உள்ள போது கடந்த காலங்களில் நாம் 7 டிரில்லியன் தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் செலவிட்டு உள்ளோம்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்றாம் இணைப்பு..
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்து விழுந்ததால் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் ரெயில்வே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆம்ட்ராக் என்பது அமெரிக்காவில் பொது நிதியில் இயக்கப்படும் ஒரு ரயில்வே நிறுவனம்.
சியாட்டில் பகுதியில் இருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பயணம் செய்தனர்.
சியாட்டிலில் இருந்து புறப்பட்ட சிறிது தொலைவில் ஆம்ட்ராக் ரெயில் ஒரு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரெயில் தடம் புரண்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்து ரெயில் பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்
சேர்த்து வருகிறோ. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த ரெயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ரயில் விபத்து ; மூவர் பலி, பலர் காயம்..

அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 6 பேர் பலி..

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்