சம்பந்தருக்கு சுகமில்லை- மூக்கு கவசத்தோடு ஏன் சென்றார் மகிந்த? சிரிப்பில் தெரியும் ரகசியம் என்ன ?
சமீபத்தில் சம்பந்தர் உடல் நலக் குறைவால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உடனே அவரை சென்று பார்த்த நபர்களில் மகிந்தவும் அடங்குகிறார். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், சம்பந்தருக்கு நோய் எதுவும் தொற்றக் கூடாது என்று மூக்கு கவசத்தை அணிந்துகொண்டு தான் சென்றதாக மகிந்த கூறியுள்ளது தான். அப்படி என்றால் இவர்களுக்கு இடையே என்ன ஒரு நெருக்கம் இருக்கும் என்று பாருங்கள். சம்பந்தரை ரணில் சென்று பார்த்தவேளை. இவ்வாறு மூக்கு கவசம் அணியவில்லை.
சம்பந்தருக்கு தொற்று நோய் எதனையும் கொடுத்து விடக் கூடாது என்றா ? இல்லை சம்பந்தருக்கு இருக்கும் நோய் தமக்கு தொற்றிவிடக் கூடாது என்று இவர்கள் மூக்கு கவசத்தை அணிந்தார்களா என்று பல கோணங்களில் இன்ரர் நெட்டில் தமிழர்கள் போட்டு கிழி கிழி என்று கிழித்துள்ளார்கள்.
மகிந்தவைக் கண்டதும் சம்பந்தர் சிரிக்கும் விதத்தை பாருங்கள். ஒரு காதலன் காதலியை பார்த்து கொடுக்குள் சிரிக்கும் அதே சிரிப்பு. இது நேசத்தின் வெளிப்பாடு. இவர்களை நம்பி தான் ஊரில் அரசியல் இருக்கு. அதுபோக தமிழர்களுக்கு சம அந்தஸ்த்து பெற்று தருவோம் என்று இவர் கூறுகிறார் ... எப்படி நடக்கும் ? எப்போது நடக்கும் ? இதில் மேலும் வேதனையான விடையம் என்னவென்றால், யாழில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியானது தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்துள்ளது தான். இதனூடாக இக் கட்சி புலம் பெயர் மக்களின் , ஆதராவை முற்று முழுதாக இழந்துள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்