பிரபாகரன் பொட்டு அம்மானோடு சாட்டலைட்டில் பேசிய பின்னரே திமுகாவில் சேர்ந்தாரா வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தற்போது தி.மு.க வோடு கைகோர்த்துள்ளார். இதுவரை காலமும் திமுகாவை மேடை மேடையாக வாரி தூற்றியவர். கடைசி நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவவில்லை என்று மேடைகளில் கோஷம் போட்டார். ஆனால் இன்று அரசியலில் யாரும் நிலந்தர எதிரி இல்லை என்பது போல திமுகவோடு கைகோர்த்துவிட்டார்.
இதுவரை காலமும் திமுகாவை குறை கூறி வந்த "வட்டம்" என்று ஒரு வட்டம் உள்ளது. அவர்கள் வாய்க்கு அவல் பொரி கிடைத்தது போல தான். சும்மா போட்டு சப்பி தள்ளுகிறார்கள். தலைவர் மற்றும் பொட்டு அம்மானோடு பேசிய பின்னர் தான் வைகோ அவர்கள் திமுக வில் இணைந்தார் என்று போட்டு வறுத்து எடுக்கிறார்கள்.
கீழ் காணும் படத்தை தான் பலரும் அதிகம் பகிந்து கொள்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஒரு விடையத்தை நாம் கவனிக்க தவறிவிட்டோம். இந்தியாவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரம் கைகளில் இருந்தால் தான், எதனையும் செய்ய முடியும். சீமான் , வைகோ , நெடுமாறன் ஐயா போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவ என்றும் பின் நிற்பவர்கள் அல்ல என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அவர்கள் கைகளில் அதிகாரம் இல்லையே . இன் நிலையில் , தற்போது விடுதலைப் புலிகள் இருந்திருந்தால், இம் முடிவை அவர்கள் நிச்சயம் வரவேற்று தான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

வைக்கோ ஒரு "RAW" கைக்கூலி என்று எம் தமிழ் இனத்துக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பது புரியாத புதிர் !
ReplyDelete