Header Ads

விஜய் படத்தில், நடிக்க மறுத்த நடிகை ஓவியா..! ஜூலியானவிற்கு அடித்த அதிஸ்ரம்..

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி62 படத்தில் நடிகர், நடிகைகள் தேர்வு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தின் பணிபுரியும் தொழில் நுட்ப குழு முதல் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் நடிகர்,நடிகையர் வரை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
அகிரா, ஸ்பைடர் என தொடர்ந்து இரண்டு படுதோல்வி படங்களை கொடுத்துள்ள நிலையில் எக்காரணம் கொண்டும் தளபதி62 படத்தின் மூலம் தான் வெற்றி இயக்குனர் தான் என்பதை நிருபித்து விடவேண்டும் என்பதில் குறியாக உள்ளார் முருகதாஸ். இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த ரகுல் பரீத் சிங் தளபதி62-வில் தளபதியுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளார்.
மேலும், நடிகை ஓவியாவிடம் படத்தில் நடிக்குமாறு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ஆனால், ஒவியாவோ என்னது..? நான் தளபதிக்கு தங்கையாக நடிக்கவேண்டுமா..? என்று கூறி முடியவே முடியாது என்று நடிக்க மறுத்துள்ளார். ஒருமுறை தங்கை கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால் சினிமா எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இந்த முடிவை ஓவியா எடுத்துள்ளார் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதனால், நடிகை ஓவியா நடிக்கவிருந்த தங்கை கதாபாத்திரத்தின் வாய்ப்பு மற்றொரு பிக்பாஸ் புகழ் போட்டியளாரான ஜூலியானவிற்கு கிடைத்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.