தாய் திட்டியதால், இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். விவசாயி. இவரது மகள் நர்மதா (வயது 16). இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தார்.
இதைத்தொடர்ந்து நர்மதா வீட்டில் இருந்து வந்தார். நேற்று நர்மதாவின் தாய் மங்களலட்சுமி தோல்வியடைந்த பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறாமல் இப்படி வீட்டிலேயே இருந்து வருகிறாயா என கூறி நர்மதாவை திட்டினார். இதில் மனமுடைந்த நர்மதா வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையிலியே இருந்து வந்தார்.
பின்னர் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றபிறகு நர்மதா தனது அறைக்கு சென்றார். அங்கு இருந்த மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற மங்களலட்சுமி வீடு திரும்பினார். அப்போது நர்மதா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நர்மதாவின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நர்மதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்