பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும்: அமெரிக்கா எச்சரிக்கை..
பாகிஸ்தானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தங்கள் நாட்டு மக்களை அமெரிக்க அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத வன்முறைகள் மற்றும் பிரிவினைவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 22 ஆம் தேதியும் இதேபோன்று அமெரிக்கா தங்கள் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்து இருந்தது.
7 மாதங்களுக்கு பிறகு தற்போது, பாகிஸ்தானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தலை அமெரிக்க வெளியுறவுதுறை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள், மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடும் என்.ஜீ.ஓக்களின் ஊழியர்கள், மூத்த பழங்குடியினர்கள், சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகியோரை குறிவைத்து பாகிஸ்தானில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முழுவதும், வெளிநாடு மற்றும் தன்னிச்சையான பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று, சீனாவும் இதே போன்றதொரு எச்சரிக்கையை தங்கள் நாட்டு மக்களுக்கு விடுத்து இருந்தது. பாகிஸ்தானில் சீனர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். சீனர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வெளியே செல்வதையும், கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்வதையும் சீனர்கள் தவிர்க்க வேண்டும் என்று சீன தூதரகம் தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்