Header Ads

சாயல் மாறியதால், பிறந்து எட்டே நாளான குழந்தையின், கழுத்தை நெறித்துக் கொலை செய்த இளம் தாய்..

தன்னைப் போலவோ, தன் கணவனைப் போலவோ முகஜாடை இல்லை என்பதற்காக, பிறந்து எட்டே நாளான குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த இளம் தாயை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தியா (28) என்ற இந்தப் பெண் கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர் பினு. இவர்களுக்கு ஏற்கனவே ஒன்பது வயதில் ஒரு பிள்ளை இருக்கிறது.

சந்தியாவுக்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன் குழந்தை பிறந்தது. ஆனால், அது தன்னைப் போலவோ, தன் கணவனைப் போலவோ முகஜாடையைக் கொண்டிருக்கவில்லை என்று நினைத்தார் சந்தியா.

இந்நிலையில், நேற்று (9) குழந்தை அசைவின்றிக் கிடப்பதாக கணவரிடம் கூறினார் சந்தியா. இதையடுத்து இருவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர்.

குழந்தை உயிரிழந்துவிட்டதாகக் கூறிய வைத்தியர்கள், குழந்தையின் கழுத்தில் இருந்த காயத்தை கவனிக்கத் தவறவில்லை. அவர்களது தகவலின் பேரில் பினு-சந்தியா தம்பதியரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

அப்போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தியா, துணியொன்றால் குழந்தையின் கழுத்தை இறுக்கிக் கொன்றதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.