ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.. வெற்றி தினகரனுக்குத்தான்.. முன்பே சொன்ன உலகத் தமிழர்கள்..
தமிழகத்தில் நடக்கும் அத்தனை அரசியல் குழப்பங்களுக்கும் எத்திசையில் தீர்விருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் களமாக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது.
'ஒண்ணாத்தான் இருக்கோம்' என வெளியே சொல்லிக்கொள்ளவாவது இந்த வெற்றி பயன்படுமே என்ற பதற்றத்தில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி, அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இதைப் பார்க்கும் தி.மு.க, குஜராத் உற்சாகத்தை இங்கும் அறுவடை செய்யலாம் என நினைக்கும் பா.ஜ.க, ’அ.தி.மு.கவை ஜெயிக்கவிடாமல் செய்து ‘நான் யார்’ எனக் காட்டுகிறேன்’ என முஷ்டி முறுக்கும் தினகரன் எனக் களத்தில் பலமான போட்டி நிலவியது.
ஆர்.கே.நகர்வாசிகளின் வாக்குகளைப் பெற அனைத்துக் கட்சிகளும் பிரசாரம், பணபலம், அதிகார பலம் எனப் பலவாறாகப் பரபரத்துக் கிடக்கிறார்கள். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உலகத் தமிழர்கள் வாக்கு யாருக்கு..? என்று தெரிந்துகொள்ள, நேற்று சிம்பிளாக athirvu இணையத்தளம் ஒரு சர்வே நடத்தியது அதில் உலகத்தமிழர்களின் தேர்வும் தினகரன்தான்,
இந்நிலையில் இன்று மாலை உத்தியோகபூர்வமாக முடிவுகள் வெளியானது அந்த முடிவுகளில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் தினகரன்.
http://www.athirvu.com/2017/12/rk.html

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்