Header Ads

வாகனத்தில் மெதுவாகச் சென்றால் அபராதம்.. எங்கு தெரியுமா..?


வாகனத்தில்  மெதுவாகச்   சென்றால்   அபராதம் - கனடாவில் சம்பவம் !

காரில் மெதுவாகச் சென்ற  பெண்ணுக்கு அந்நாட்டு காவல்துறை அபராதம் விதித்துள்ள சம்பவமானது, கனடா நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பொதுவாகக் காரிலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ வேகமாக சென்றவர்களுக்கு அபராதம்
விதிப்பது எல்லா நாடுகளிலுமுள்ள வழமையாகும். ஆனால், கனடாவில் 47 வயது பெண்மணி ஒருவர், வாகனங்கள் வேகமாகச் செல்லும் பாதையில், மிக மெதுவாகக்  சென்றுள்ளார். அப்போது, அவருக்கு பின்னாள் வந்த வாகனங்களில் பயணித்தவர்கள், எரிச்சல் அடைந்துள்ளனர்.அதனால், அவர்களில் ஒருவர் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த காவல்துறையினர், குறித்த பெண்மணியின்  வாகனத்தை நிறுத்தி,வேகமாக செல்ல வேண்டிய பாதையில்,மெதுவாகச்  சென்றதற்காக அபராதம் விதித்துள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி வருகிறது. இதை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள், எங்கள் வீட்டில் உள்ள அப்பா,அம்மா மற்றும் பெரியவர்களுக்கு இதுகுறித்து தெரிவித்து விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும். முதலில் என் அம்மாவை அழைத்து, அபராதம் விதிக்கப்பட்டது உங்களுக்குத் தானா  என்று கேட்க வேண்டும் என தங்களது சமூக வலைதள பக்கங்களில் கேலியாகப் பதிவு செய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இது பல நாடுகளில் உள்ளது. 100 Km ல் போகவேண்டிய இடத்தில் 50 Km ல் சென்றால் பின்னால் வாகன நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதனால் இப்படியான தண்டப்பணம் அறவிடுவார்கள். நோர்வேயில் (இங்கு) இப்படி அறவிட்ட்தாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    ReplyDelete

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.